*நாட்டுரக மீன்கள்*
நாட்டுரக மீன்கள் : காவிரி டெல்டா பகுதியில் ஒருகாலத்தில் ஏகப்பட்ட நாட்டு மீன்கள் வகை இருந்துள்ளது.பள்ளு இலக்கியங்கள் கிட்டத்தட்ட நூறிற்கும் மேல் மீன் இனங்களை அடையாளப்படுத்தியுள்ளது. இவற்றில் 20-30 வகை ரகங்களே தற்போது காணகிடைக்கிறது. குழம்பு மற்றும் வறுவல்களுக்கென தனித்தனி மீன்களை ருசியாக சமைத்து நமது ஐயன்களும்,ஆச்சிகளும் உண்டுள்ளனர். தற்போது ரோக்,கட்லா,ஜிலேபி போன்ற சதைப்பற்றுள்ள மீன்கள் மட்டுமே அதிகஅளவில் பிராய்லர் கோழி மாதிரி கிடைத்து வருகிறது. ஊரிலுள்ள பெரியாம்பிளைகள் மட்டுமே இந்த வகை மீன்களை அடையாளம் கண்டு கூறுகின்றனர். 1970-80 காலகட்டத்தில் மீன்வளத்தினை பெருக்க மேட்டூர் அணை பகுதியில் கட்லா,ரோக் போன்ற மீன்வகைகளை விட்டதாகவும் அவையே காவிரி பாயும் பகுதிகளிலுள்ள நாட்டுரக மீன்களை அழித்து வருவதாகவும், அதில் தப்பி பிழைத்தவையே நம் கண்ணில் சிக்குவதாகவும் ஒரு கருத்து உள்ளது. இத்தகைய மீன்கள் குறித்து தேடலில் இராமமூர்த்தி நாகராஜன், Kannan Sahana Sabari Rajaa போன்ற நண்பர்கள் உள்ளனர். இம்மீன்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அளித்ததற்கு நன்றிகள்.